84 About life quotes in Tamil

Quotes are the ones that provide valuable thoughts to shape our lives, that's the reason people are in search of good motivational quotes on the internet. If Tamil is the oldest language in the world, then we can understand - how strong it makes you, when you read quotes in Tamil?

Your life is driven by your thoughts; whenever you are depressed and down; you need something to encourage your thoughts. And it can be easily done only by using the best quotes in Tamil. We are here to help you in finding the best Tamil quotes.

about-life-quotes-in-tamil

Tamil desiyam offers the latest collection about life quotes in Tamil for free on our website, that will motivate you to be successful in your life. All these quotes are in Tamil language, so that - it can be easily understood by Tamil readers. These quotes in Tamil about life helps to motivate you to attain success in life.

Quotes in Tamil

About Life Quotes in Tamil latest collection

84 About Life Quotes in Tamil are as follows


1. அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே - அடிமையாக்கி விடுவார்கள்.


2. அதிகம் பொறுமையுடன் நடக்காதே - பைத்தியம் ஆகும் வரை விட மாட்டார்கள்.


3. வெளிப்படையாக இருந்து விடாதே - பலர் உன்னை வெறுக்கத் தொடங்கி விடுவார்கள்.


4. எல்லோரையும் நம்பி விடாதே - ஏமாற்ற பலர் இருக்கிறார்கள்.


5. கோபப்படாமல் இருந்து விடாதே - கோமாளி ஆக்கி விடுவார்கள்.


6. யாரிடமும் வலியை பகிராதீர்கள் - தனியாகவே அழுது கொள்ளுங்கள், நம்மிடம் ஆறுதல் சொல்லிவிட்டு - அடுத்தவரிடம் சிரித்து மகிழும் உலகம் இது.


7. இறைவனுக்கு கொடுக்க நினைப்பதை இல்லாதவர்களுக்கு கொடுங்கள், ஏனென்றால் - கடவுள் யாரிடமும் கையேந்தி யாசகம் கேட்பதில்லை.


8. என் குணம் என் எதிரில் நிற்பவனின் குணத்தை பொறுத்தது.


9. பணம்- இருப்பவனை தூங்க விடாது, இல்லாதவனை வாழ விடாது.


10. அழைப்பு வரும் வரை - உழைப்பு அவசியம்.


11. அதிகமாகவோ வேகமாகவோ பேசாதீர்கள் -
தெளிவாகவும் சுருக்கமாகவும் பேசுங்கள்.


12. மேலே ஏறும்போது சந்திப்பவர்களிடம் இனிமையாக பழகுங்கள் -ஏனெனில்,
கீழே இறங்கும் போதும் அவர்களை தான் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.


13. உறவுகள் தூக்கி எறிந்தால் வருந்தாதே, வாழ்ந்து காட்டு - அவர்கள் உன்னைத் தேடி வரும் அளவிற்கு.


14. வானிலையை விட - அதிக வேகமாக மாறுகிறது மனிதனின் மனநிலை.


15. யாரிடமும் பேச வேண்டாம் என்ற மனநிலை உருவாக காரணம் - அதிகமாக பேசியதின் விளைவாகத்தான் இருக்கும்.


16. இன்று கை கொடுக்க யாரும் இல்லை என்று கவலைப்படாதே - நாளை உனக்காக கைத்தட்ட உலகமே காத்திருக்கிறது.


17. பயன்படாத உண்மையை விட தேவைக்கு பயன்படும் பொய்யே கொண்டாடப்படுகிறது.


18. நண்பனை நம்பு, துரோகியை கூட நம்பு - ஆனால் சொந்தத்தை நம்பாதே.


19. அதிகம் நல்லவனாக இருக்க நினைக்காதே - உன்னை நடிகன் என்று சொல்லிவிடுவார்கள்.


20. நிறம் மாறும் போட்டியில், மனிதர்களிடம் நான் தோல்வி அடைந்தேன் -இப்படிக்கு பச்சோந்தி.


21. உன்னை நேசிக்கும் நாலு பேரை நீ நேசிக்க தொடங்கினாலே - உன்னை வெறுக்கும் 100 பேரைப் பற்றி யோசிக்க நேரம் இருக்காது.


22. பணக்காரன் வீட்டு படியை மிதிக்காதே - அங்கே அவமானம் காத்திருக்கிறது.


23. நம்மிடம் ஏதுமில்லை என்று நினைப்பது ஞானம் - நம்மை தவிர ஏதும் இல்லை என்று நினைப்பது ஆணவம்.


24. தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் - கண்ணில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.


25. அடைவதற்கு ஆசைப்படுகிறவன் - இழப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.


26. வெற்றிக்காக போராடும் போது வீண் முயற்சி என்பார்கள் - வெற்றி பெற்ற பின்பு விடாமுயற்சி என்பார்கள்.


27. அறிவாளிகளுக்கு அறிவு அதிகம், ஆனால் முட்டாள்களுக்கு அனுபவம் அதிகம்.


28. எதையும் சாதிக்க - நிதானம், ஒரு அற்புதமான ஆயுதம்.


29. ஆணவமும் அழிவும் - இரட்டைக் குழந்தைகள்.


30. அற்ப ஆசைகள் - பெரிய வெற்றியை தேடித் தருவதில்லை.


31. சோம்பி நிற்கும் மனிதனிடம் -துன்பங்கள் உற்பத்தியாகின்றன.


32. நீயாகவே முடிவு செய் - நீயாகவே செயல்படு.


33. ஆசை வளர்ப்பதும், ஆணவம் பெருகுவதும் - மனிதனது அழிவுக்கே அறிகுறி.


34. வறுமையை விட சிறந்த பள்ளிக்கூடம் - வேற எதுவும் கிடையாது.


35. துன்பத்தில் கிடைக்கும் அனுபவம் - துணிச்சல் தரும்.


36. கோபத்தில் நாக்கு வேலை செய்யும் அளவிற்கு - மூளை வேலை செய்வதில்லை.


37. அதிக ஆசை இல்லாதவர்கள் மட்டும்தான் - அதிக இன்பத்துடன் வாழ்கிறார்கள்.


38. கடவுளிடம், ஏதாவது வரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறோம் - ஆனால் வாழ்க்கை என்பதே வரம் என்பதை எப்போது புரிந்து கொள்ளப்போகிறோம்.


39. நமக்கு, ஒருவரிடம் எவ்வளவு உரிமை உள்ளதை என்று அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் - நாமே தீர்மானித்து விட்டால், பிறகு அவமானங்களும் இழப்புகளும் மட்டும்தான் மிஞ்சும்.


40. நரிகளுக்கு மத்தியில் வாழும்போது, சில சமயம் கர்ஜனை செய்து தான் - சிங்கமென நிரூபிக்க வேண்டியுள்ளது.


41. இல்லாதவன்தானே, என்ன செய்வான் என்று நினைக்காதீர்கள் - இல்லாதவனுக்கு இழப்பதற்கு ஏதுமில்லை 'எதுவும் செய்வான்'


42. சாதிப்பவர்கள் யாரும் பெருமை பேசுவதில்லை - பெருமை பேசுபவர்கள் யாரும் சாதிப்பதில்லை.


43. எப்படா கீழ விழுவான், நம்ம போய் தூக்குற மாதிரி நடிக்கலாம் - என்பதே சில நபர்களின் எதிர்பார்ப்பு.


44. முல்லின் திறமை என்னவென்றால், தன்னை காலால் மிதித்தவனை- தன் கையாலேயே எடுக்க வைப்பது.


45. மருந்தால் சரியாகாத சில காயங்கள் கூட - மறந்தால் சரியாகும்.


 

Quotes in Tamil about life

Latest quotes in Tamil about life are as follows

quotes-in-tamil-about-life


46. என் அன்பால் நான் அடைந்ததை விட - இழந்ததே அதிகம்.


47. வியர்வை சிந்தாத மனிதனும், மை சிண்டாத பேனாவும் - ஒருபோதும் சாதித்த முடியாது


48. ஆசைப்படவே பயமாயிருக்கு, நான் வாழ்க்கையில் இழந்த ஒவ்வொன்றையும் - நினைத்துப் பார்க்கும் பொழுது.


49. ஒருவருக்கு உதவி செய்துவிட்டு, நன்றியை எதிர்பார்க்காதே - அதற்கு வாய்ப்பு குறைவு.


50. நம்மிடம் உள்ள முட்டாள்தனத்தை அறிந்து கொள்வதே - புத்திசாலித்தனம்.


51. நீங்கள் மற்றவர்களோடு போராடுவதாக நினைக்கிறீர்கள், ஆனால் உண்மையில் உங்கள் போராட்டம் - உங்களது எண்ணங்களோடு மட்டுமே.


52. முதுகில் குத்தும் பலரை விட, முகத்துக்கு முன் சண்டை போடுபவர்கள் - உலகில் சிறந்தவர்கள்.


53. ஏமாற்றங்களை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும், ஏமாற்றமாய் அல்ல - அனுபவமாய்.


54. முன்னேற்றம் என்பது சிறிதளவாயினும் - தினமும் இருக்க வேண்டும்.


55. சின்ன புத்தி உள்ளவன்தான் - பெரிய புத்தி இருப்பது போல் பேசுவான்.


56. சமைக்கும் போது அம்மாவின் அருமையும், சம்பாதிக்கும் போது அப்பாவின் அருமையும் - தெரியும்.


57. விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள், விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள் - இதுதான் மனிதனின் எண்ணம்.


58. அன்பாக இருந்தாலும் சரி, ஆறுதலாக இருந்தாலும் சரி - புரியாத இடத்தில் அனைத்துமே குப்பை தான்.


59. நேரம் சரியில்லை என்று சொல்வதெல்லாம் பொய் - நீ சரியில்லை என்பதுதான் மெய்.


60. தாய் தந்தையரின் அருமை, நீ வளரும்போது தெரியாது - உன் பிள்ளையை நீ வளர்த்தும்போது தான் - புரியும்.


61. உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடம் நிலைப்பதில்லை - உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதும் இல்லை.


62. உன் மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நீதான் - உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல.


63. ஒருவன் உன்னை ஒரு முறை அடித்தால், அது அவனுடைய தவறு; அவனிடம் இரண்டாவது முறையும் நீ அடி வாங்கினால் - அது உன்னுடைய தவறு.


64. உன்னை செதுக்க ஒளி தேவையில்லை - பலரது அவமானங்களும், சிலர் அது துரோகங்களும் - போதும்.


65. உனக்கு மற்றவர்களை ஏமாற்ற தெரியவில்லை என்பதை தான் - உனக்கு பிழைக்க தெரியவில்லை என்பார்கள்.


66. உன் துன்பத்திற்கு பாதி காரணம் - உன் கற்பனைகளே.


67. ஒருவனுடைய குறை மட்டும் உன் கண்ணுக்குத் தெரிகிறது என்றால் - நீ அவனை தவறான கோணத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.


68. அனைவரிடம் நெருங்கி பழகினால் - நீ நொறுங்கிப் போவது உறுதி.


69. நம்மிடம் இல்லாததை தேடுகிறோம் என்ற பெயரில் - இருப்பதையும் இழந்து விடுகிறோம்.


70. இந்த சமூகத்தில், ஏன் என்று கேட்பவன் ஏமாளி - ஆம் என்று சொல்பவன் அறிவாளி.


71. கடந்து போனதை நினைத்து கவலைப்பட வேண்டாம் - கவலைப்பட கூடாது என்பதற்கு தான் அது கடந்து போனது.


72. ஒரு கவலையை மறக்கச் செய்ய ஏதோ ஒன்று கிடைத்துக்கொண்டேதான் இருக்கும் - அது இன்னொரு கவலையாகவும் இருக்கலாம்.


73. எவரையும் பார்த்து, இவருக்கென்ன குறை என்று எடை போட்டு விடாதே - ஏனென்றால் வலிகளோடு தான் வாழ்கிறார்கள் பலர்.


74. எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறது என்று கவனி - அவன் எப்படி பட்டவன் என்று மிக நன்றாக தெரிந்து கொண்டு விடலாம்.


75. நாம் தவறு செய்யும் போது, வக்கீலாக மாறிவிடுகிறோம் - அடுத்தவர்கள் தவறு செய்தால், நீதிபதியாக மாறிவிடுகிறோம்.


76. விளக்கங்களை கொடுத்து தக்க வைக்கும் உறவுகள் எதுவும் - நெடுங்காலம் நீடிப்பதில்லை.


77. எவ்வளவு சம்பாதிக்கிறாய், எங்கே வாழ்கிறாய் என்பதைவிட முக்கியமானது - எவ்வளவு இன்பமாய் இருக்கிறாய் என்பது.


78. உண்மை என்றால் என்னவென்று தெரியாதவர்களிடம் - உண்மையாக இருப்பது தான் நம்முடைய முட்டாள்தனம்.


79. துரோகங்களை இழைத்து விட்டு, அந்த குற்ற உணர்வு சற்றும் இல்லாமல் திரிபவர்கள் தான் - மிகச் சிறந்த துரோகிகள்.


80. சில்லறைகள் சத்தமிடத்தான் செய்யும்.


81. எந்த ஒரு செயலை செய்ய நீ விரும்பினாலும் - முதலில் பேசுவதை நிறுத்தி ,செய்யலை தொடங்கு.


82. நம்பிக்கை துரோகம் என்பது - தகுதியற்ற ஒருவரை நம்பியதற்கு கிடைத்த தண்டனை.


83. உன் கவலைகளை ஆண்டவனிடம் மட்டும் சொல்லி அழு - ஏன் என்றால், அவர் மட்டும்தான் அதை யாரிடமும் சொல்லி சந்தோஷப்பட மாட்டார்.


84. ஒன்று வெற்றி கொள்கிறேன், இல்லை கற்றுக்கொள்கிறேன் - எனக்குத்தோல்விகள் இல்லை.


 

Thanks for reading. Find the latest collection of novels in Tamil and we offer novels in Tamil free download here.

Frequently Asked Questions about life quotes in Tamil

Which is the best website to find about life quotes in Tamil?

Tamil desiyam is the best website that provides the best about life quotes in Tamil for free. We have listed out the latest quotes - that will encourage you to become successful in life.

Are there any Life quotes in Tamil in one line?

Yes, you can find one line quotes in Tamil on Tamil desiyam website, though they are one line quotes - they have an in-depth meaning, that will  help you to over come stress due to failure and move towards success.

How many Motivational quotes in Tamil are available?

You can find more than 75 Motivational quotes in Tamil at Tamil desiyam website. This is the latest collection of quotes.

Where can I get quotes in Tamil about life?

You can get Quotes in Tamil about life at Tamil desiyam website. These quotes are unique and will help you to shape your thoughts and make your life better.

Find more life quote in Tamil and motivational quotes in Tamil on our website Tamil Desiyam.

Sharing is Caring :)

16 thoughts on “84 About Life Quotes in Tamil”

  1. இந்த லைஃப்Quoteகள் 정말 அருமை! அதில் சில என் மனதில் நிற்கும் வண்ணம் ஆட்டிச்சென்றன. தமிழ் மொழியின் அழகையும், வாழ்க்கையின் உண்மைகளையும் இந்தQuotes கள் சிறப்பாக தொடர்புபடுத்தியுள்ளதாக உணர்கிறேன். தொடர்ந்து இப்படி நம்முடன் பகிரவும்!

    Reply

Leave a Comment