No Image Available

Mannar Mannan Books

 Author: R. Mannar Mannan  Category: Payitru Padaippagam  Publisher: பயிற்று பதிப்பகம்  Published: 2021  Country: India  Language: Tamil  Tags: Mannar Mannan |
 Description:

Buy Author Mannar Mannan books online at best discount prices here, we offer door delivery of the books in India and anywhere in the world. For door delivery of books within India, please call mobile number +91-8925095553 (Payitru Padaippagam publisher).

If you want books to be delivered overseas, please call or WhatsApp us in the mobile number +91-7397019916.

 

இரா.மன்னர் மன்னன் எழுதிய அனைத்து நூல்களும் ஒரே இடத்தில்… குறைந்த விலையில்…

ஐயங்களுக்கு அழைக்க வேண்டிய எண்: +91-8925095553 (பயிற்று பதிப்பகம்)

குறிப்பு: அயல்நாடுகளில் உள்ளவர்கள் நூல்களைப் பெற பர்ப்பிள் புத்தக நிலையத்தைத் தொடர்பு கொள்ளவும். புலன எண்: +91-7397019916

mannar-mannan-books

Mannar Mannan is an author, writer, numismatist, researcher, historian, history YouTuber and he has written 8 books till date. Find more details about the Author Mannar Mannan here.

Below are the list of 8 books written by the Author Mannar Mannan

 

mannar-mannan-author Mannar Mannan Books
Buy Author Mannar Mannan books online at best discount prices here, we offer door delivery of the books in India...
Payitru Padaippagam R. Mannar Mannan
adhitha-karikalan-kolai Aditya Karikalan Death |ஆதித்த கரிகாலன்...
Aditya Karikalan Death / ஆதித்த கரிகாலன் கொலை “Aditya Karikalan Death” book reveals the true facts about  Aditya Karikalan Death with...
Payitru Padaippagam R. Mannar Mannan
Rajaraja cholan book by mannar mannan Rajaraja Cholan இராஜராஜ சோழன்
Rajaraja Cholan is a book in Tamil language by Mannar Mannan. இராஜராஜ சோழன் ( Rajaraja Cholan ) நூலின் மூன்றாம் பதிப்பு....
Payitru Padaippagam R. Mannar Mannan
vilambara-vettai Vilambara Vettai | விளம்பர வேட்டை
Vilambara Vettai book by Mannar Mannan Vilambara Vettai | விளம்பர வேட்டை மனிதர்களில் பெரும்பாலானோர்க்கு எஜமானர்களாக உள்ள விளம்பரங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள ஒரு சாமானியனுக்கு...
Payitru Padaippagam R. Mannar Mannan
pallavar varalaru book by mannar mannan Pallavar Varalaru பல்லவர் வரலாறு
Mannar Mannan is the author for this book Pallavar Varalaru . Book Introduction as follows Pallavar Varalaru பல்லவர் வரலாறு மூவேந்தர்களையும்...
Payitru Padaippagam R. Mannar Mannan
aayutha desam tamil book by mannar mannan ஆயுத தேசம்: கொங்கு நாட்டின் தொழில்நுட்ப...
Aayutha desam Tamil book by Mannar Mannan. கற்கால மனிதனின் கல் ஆயுதம் முதல் இன்றைய அணு ஆயுதம் வரை மனிதனின் ஆயுதத் தேவை, காலம்தோறும்...
Payitru Padaippagam R. Mannar Mannan
Panathin Payanam book by mannar mannan Panathin Payanam பணத்தின் பயணம்
Panathin Payanam book was written by Author Mannar Mannan. Panathin Payanam பணத்தின் பயணம் - பண்டமாற்றில் தொடங்கி பிட்காயின் வரை பணத்தின் வரலாற்றை...
Payitru Padaippagam R. Mannar Mannan
the-first-launch The First Launch
The First Launch book by Syed Hassan and Mannar Mannan The book enables us to visualize the pinnacle of multiple...
Payitru Padaippagam R. Mannar Mannan

 

Aditya Karikalan Death | ஆதித்த கரிகாலன் கொலை

Aditya Karikalan Death / ஆதித்த கரிகாலன் கொலை

“Aditya Karikalan Death” book reveals the true facts about  Aditya Karikalan Death with historical evidence by the author Mannar Mannan. This book contains 600+ pages, that was written after research of 50+ Stone inscription & 50+ Copper plate inscription.

M.R.P.: ₹700

Our Discount Price : ₹550

To buy this book immediately, call the number mention above and  payment can be done through Google Pay in the same number.

Find more details about the book Aditya Karikalan death here.

ஆதித்த கரிகாலன் கொலை
வழக்கு… வதந்திகள்… வரலாறு…

600+ பக்கங்களில்.
50+ கல்வெட்டுகள்,
50+ செப்பேடுகளை ஆய்வு செய்து உருவான நூல்.

சோழர் வரலாற்றையும், தமிழக வரலாறு ஆய்வு செய்யப்படும் முறையையும் பெரும் அளவில் மாற்ற உள்ள நூல்.

நூல் வேண்டுபவர்கள் கூகுள் பே மூலம் பணம் செலுத்திவிட்டு, அதிலேயே அஞ்சல் முகவரி, பின்கோடு, தொடர்பு எண் ஆகியவற்றை அனுப்பலாம்.

நூல் விலை: ₹700

எங்கள் தள்ளுபடி விலை: ₹550

வரலாற்றில் சோழர்கள் மீது சுமத்தப்படும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையாகவும் ஆதாரம் திரிக்கப்பட்டவையாகவுமே உள்ளன.

அவற்றின் ஒருசோற்றுப் பதம்தான் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய குற்றச்சாட்டுகள், தமிழக வரலாற்றில் முழுதும் மறைக்கப்பட்ட ஒரு பெரும் யுத்தத்தின் அடக்க முடியாத சத்தமே ஆதித்த கரிகாலனின் கொலை ஆகும்.

வரலாற்று ஆய்வாளர் திரு. இரா.மன்னர் மன்னன் அவர்கள், தம் அடுத்த படைப்பில்
“ஆதித்த கரிகாலன் கொலை – வழக்கு, வதந்திகள், வரலாறு” என்ற தலைப்பில், இதுநாள் வரை மக்களிடம் பரவியிருந்த வரலாற்றுத் திரிபுகளுக்கும், வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பல வரலாற்றுச் சான்றுகளோடு நம்மிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.

Vilambara Vettai | விளம்பர வேட்டை

Vilambara Vettai is a book written by Author Mannar Mannan in which he explains how advertisements are controlling humans. A layman needs to know many fields like history, business and psychology to understand advertising, which is the master of most of the people.
Because advertisement is the ocean is where all these rivers meet. So this book explains each of them as simply as possible.

மனிதர்களில் பெரும்பாலானோர்க்கு எஜமானர்களாக உள்ள விளம்பரங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள ஒரு சாமானியனுக்கு வரலாறு, வணிகம், மனோதத்துவம் எனப் பல துறைகளையும் அறிய வேண்டிய தேவை உள்ளது.

ஏனெனில் இந்த அனைத்து நதிகளும் சங்கமிக்கும் பெருங்கடல்தான் விளம்பரங்கள். அதனால் அவை ஒவ்வொன்றையும் பற்றி கூடுமானவரை எளிமைப்படுத்தி கூறுகிறது இந்த நூல்.

Varalatril Sila Thiruthangal

Varalatril Sila Thiruthangal is a book written by Author Mannar Mannan in which he explains; what is the definition of chastity in Tamil literature? How Are Arabic Numbers Numerical? What is the connection between the racket and Tipu Sultan? This book contains 20 historical studies that Tamil people must read.

This book suggests the need to re-examine what we believe to be history.

தமிழ் இலக்கியங்கள் காட்டும் கற்பின் வரையறை என்ன? அரபு எண்கள் எப்படித் தமிர்களுடையவை? ராக்கெட்டுக்கும் திப்பு சுல்தானுக்கும் என்ன சம்பந்தம்? – என்பவை உள்ளிட்ட தமிழ் மக்கள் கட்டாயம் படிக்க வேண்டிய 20 வரலாற்று ஆய்வுகள் இந்நூலில் உள்ளன.

வரலாறு என்றுநாம் எதையெல்லாம் நம்புகிறோமோ அதையெல்லாம் மீள் ஆய்வுக்கு செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது.

Rajaraja Cholan | இராஜராஜ சோழன்

Mannar Mannan is the Author of the book Rajaraja Cholan in which, he brings out the lies that – Rajaraja Cholan was a Brahmin supporter; he inculcated untouchability in the people; he seized the lands of the downtrodden and gave them to the Brahmins; Is it true that he used Hindi in inscriptions and coins?

Author also exposes the lies that – Rajaraja Chola built the great temple of Tanjore with slaves; the pinnacle of the temple flight is made of a single stone weighing 80 tons; the shadow of the temple plane does not fall;

He also exposes the rumours, that the Nandi statue in the temple grows; Rajaraja cholan built a tall tower to protect the seed paddy in an urn; allowed Sanskrit in the temple; Devadasi system, with all the evidence.

இராஜராஜ சோழன் பிராமண ஆதரவாளர்; மக்களிடம் தீண்டாமையைப் புகுத்தினார்; தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களைப் பிடுங்கி பிராமணர்களுக்குக் கொடுத்தார்; கல்வெட்டுகளிலும் நாணயங்களிலும் இந்தியைப் பயன்படுத்தினார்… என்றெல்லாம் சொல்லப்படுவது உண்மையா?

இராஜராஜ சோழன், அடிமைகளை வைத்து தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினார்; கோவில் விமானத்தின் சிகரம் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆனது; கோவில் விமானத்தின் நிழல் கீழே விழாது;

கோவிலில் உள்ள நந்தி சிலை வளர்கிறது; விதை நெல்லை கலசத்தில் வைத்துப் பாதுகாக்கவே உயரமான கோபுரத்தைக் கட்டினார்; கோவிலில் சமஸ்கிருதத்தை அனுமதித்தார்; தேவதாசி முறையை உருவாக்கினார்… என்பதற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றனவா?

Panathin Payanam | பணத்தின் பயணம்

Panathin Payanam book was Authored by writer Mannar Mannan, that explains – how money is used in our economy?

“None of the founders of today’s economy did it for social good, for the upliftment of the people, or for economic reform.

We must be careful when we use them for our own profit, which were created for the benefit of some individual. People use snake venom as medicine, but the snake’s teeth contain poison, not medicine!”

From demonetization in world history to demonetization of the central government, many historical values ​​that we need to know, which are not easily grasped by us, are explained in a simple way.

Forgetting rest, giving up food, running away from sleep, money has told its history through this book… Now, money will talk!

“இன்றைய பொருளாதாரத்தின் அடிப்படைகளை உருவாக்கியவர்கள் எவரும் சமூக நன்மைக்காகவோ, மக்களின் உயர்வுக்காகவோ, பொருளாதார சீர்திருத்தங்களுக்காகவோ அவற்றை உருவாக்கவில்லை.

தனிப்பட்ட சிலரின் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட அவற்றை நாம் நமது லாபத்திற்காக பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டியது கட்டாயம். பாம்பின் விஷத்தை மருந்தாக மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள், ஆனால் பாம்பின் பற்களில் உள்ளது மருந்தல்ல விஷம்தான்!”

உலக வரலாற்றில் பணமதிப்பு நீக்கம் முதல் மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம் வரையில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய, நமக்கு எளிதில் பிடிபடாத பற்பல வரலாற்று விழுமியங்கள் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன.

ஓய்வை மறந்து, உணவைத் துறந்து, உறக்கத்தைப் பிரிந்து ஓடி ஓடி சேர்க்கும் பணம், இந்த நூலின் வழியே தன் வரலாறைக் கூறவந்துள்ளது… இனி, பணம் பேசும்!

Aayutha Desam | ஆயுத தேசம்

Aayutha Desam book by author Mannar Mannan explains, the history from the stone weapon of the stone age man, to the nuclear weapon of today, man’s need for weapons has changed form over time, but has continued for many reasons. Man armed to defend himself, armed to capture nations.

Now many countries of the world are interested in the perverse game of nuclear weapons to show off their country’s strength.

Among many types of weapons like stone, wood, iron, metal type weapons are more durable. This book tells the origin story of those metal weapons.

Indian history and Tamil Nadu history do not mention much about the area around Coimbatore called Kongu.

This book gives a lot of unknown information such as the metals of the Kongu regions were the basis of today’s rocket technology.

The later Cheras of Kong developed aerial weapons, a variety of cannons, and large-scale stone throwers.

The early forms of today’s airplanes, rockets and guns began their history here.

After reading this book we will understand the historical importance of Kongu country. Come witness the silent history frozen in the Land of Arms.

கற்கால மனிதனின் கல் ஆயுதம் முதல் இன்றைய அணு ஆயுதம் வரை மனிதனின் ஆயுதத் தேவை, காலம்தோறும் வடிவம் மாறிவந்தாலும் பல காரணங்களால் நீண்டுகொண்டே வருகிறது. தன்னைக் காத்துக்கொள்ள ஆயுதம் செய்த மனிதன், நாடுகளைப் பிடிக்க ஆயுதம் செய்தான்.

இப்போது உலக நாடுகள் பல, தங்கள் நாட்டின் பலத்தைப் பறைசாற்றிக்கொள்ள அணு ஆயுதம் எனும் விபரீத விளையாட்டில் ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கின்றன.

கல், மரம், இரும்பு என பல வகை ஆயுதங்களில் உலோக வகை ஆயுதங்களின் ஆயுள் அதிகம். அந்த உலோக ஆயுதங்களின் ஆதிக் கதையைச் சொல்கிறது இந்த நூல்.

கொங்கு எனப்படும் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பகுதியைப் பற்றி இந்திய வரலாறும் தமிழக வரலாறும் அவ்வளவாக எடுத்துரைப்பதில்லை.

கொங்கு நாட்டுப் பகுதிகளின் உலோகங்கள்தான் இன்றைய ராக்கெட் தொழில்நுட்பத்துக்கு அடிப்படையாக விளங்கின என்பன போன்ற அறியப்படாத பல ஆச்சர்யத் தகவல்களைத் தருகிறது இந்த நூல்.

‘வானில் மிதந்து சென்று தாக்கும் ஆயுதங்களையும், பலவகை பீரங்கிகளையும், பெரிய அளவிலான கல் எறியும் கருவிகளையும் கொங்கில் பிற்காலச் சேரர்கள் உருவாக்கினர்.

இன்றைய விமானங்கள், ராக்கெட்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றின் ஆரம்ப கால வடிவங்கள் இங்குதான் தங்கள் வரலாற்றைத் தொடங்கின.’ – இதுபோல இன்னும் பல அரிய தகவல்கள் இந்த நூலெங்கும் சொல்லப்பட்டுள்ளன.

இந்த நூலைப் படித்த பிறகு கொங்கு நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் நமக்குப் புரியும். ஆயுத தேசத்தில் உறைந்துகிடக்கும் அமைதியான வரலாறைக் காணலாம் வாருங்கள்.

Pallavar Varalaru | பல்லவர் வரலாறு

The Tami history book Pallavar Varalaru by author Mannar Mannan, shows that the Pallava Empire flourished the art of sculpture and painting in Tamil Nadu. There are many people who carved sculptures that are not visible.

The Mamallapuram umbrella sculptures bear witness to this. The Pallavas ruled the Thontai region with Kanchipuram as their capital. Jainism was cultivated during the Pallavar period. Vegetarianism is also established.

Who were the Pallava kings after examining the charters given by the Pallavas? who Researchers have found that. The early Pallavas were the ones who issued the Prakrit charters. Medieval Pallavas were the ones who issued Sanskrit charters.

Historians say that the later Pallavas were the ones who published charters in Granth Tamil. So what was the beginning of the Pallavas? How many Pallava kings ruled Tamil Nadu? Author Ira Mannar Mannan has tried to answer all these questions in this book through his research.

Tirunavukarasar Apar alias Appar converted Mahendravarma Pallava, who initially followed Jainism, to Saivism. Due to this, Jain schools were demolished and Saivite temples were built by Mahendravarman.

It was during his time that Tamil Granthaka inscriptions were found on the coins of the Pallava Empire. This book says that Sirutonda Nayanar, who tells Periyapurana, was Paranjothi, the general of Mahendravarman.

It is also mentioned that after Paranjodi, the Pallava king named Kalatsingan became Shivathonda.

சிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர்.

மாமல்லபுரம் குடைவரை சிற்பங்கள் இதற்கு சாட்சி. காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். பல்லவர் காலத்தில் சமணம் வளர்க்கப்பட்டது. சைவமும் நிலைபெற்றுள்ளது.

பல்லவர்கள் அளித்த பட்டயங்களை ஆய்வு செய்தே பல்லவ மன்னர்கள் யார்? எவர்? என இனங்கண்டுள்ளனர் ஆய்வாளர்கள். பிராகிருதப் பட்டயங்களை வெளியிட்டவர்கள் முற்காலப் பல்லவர்கள். சமஸ்கிருதப் பட்டயங்களை வெளியிட்டவர்கள் இடைக்காலப் பல்லவர்கள்.

கிரந்தத் தமிழில் பட்டயங்களை வெளியிட்டவர்கள் பிற்காலப் பல்லவர்கள் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். அப்படியானால் பல்லவர்களின் தொடக்கம் எது? எத்தனை பல்லவ அரசர்கள் தமிழகத்தை ஆண்டுள்ளனர்? அத்தனை கேள்விகளுக்கும் தன் ஆய்வின் மூலம் இந்த நூலில் விடைகாண முயன்றிருக்கிறார் நூலாசிரியர் இரா.மன்னர் மன்னன்.

தொடக்கத்தில் சமண மதத்தினைப் பின்பற்றிய மகேந்திரவர்ம பல்லவனை சைவ மதத்திற்கு மாற்றினார் அப்பர் என்கிற திருநாவுக்கரசர். இதன் காரணமாக சமணப் பள்ளிகள் இடிக்கப்பட்டு சைவத் திருக்கோயில்களைக் கட்டினான் மகேந்திரவர்மன்.

இவன் காலத்தில்தான் பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் நாணயங்களில் தமிழ் கிரந்தக எழுத்துப் பொறிப்புகள் இடம்பெற்றுள்ளன. மகேந்திரவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி என்பவர்தான் பெரியபுராணம் கூறும் சிறுத்தொண்ட நாயனார் என்கிறது இந்த நூல்.

பரஞ்சோதிக்குப் பிறகு கழற்சிங்கன் என்ற பல்லவ அரசனே சிவத்தொண்டராக மாறியுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது.

 

The First Launch

This book The First Launch enables us to visualize the pinnacle of multiple historical events in rocket science and traces the origin of modern rocketry to India, its birthplace and cradle of multiple global innovations in the past and on track to rewrite the frontiers of innovation in future.

About the Author:
Syed Hassan is a global technology leader who has worked in large corporations across many continents for more than 25 years.
Passionate about Physics and the latest in IT and space research, he is an expert and an acclaimed speaker on Artificial Intelligence and Industrial Revolution 4.0 in leading academic and industry forums.

With an educational background in Physics, Computer Science and Management, Hassan has brought in facets of rocket science and technology covering the entire spectrum from its origin to the latest trends.

About Mannar Mannan

Mannar Mannan is a well-known historian and numismatist in Tamil Nadu, India. As of 2021, he has authored 8 books on various topics in Tamil. Aayudha Desam was the book R. Mannar Mannan had written earlier in Tamil, which identifies the real origin of modern rocket science.

Mannar Mannan’s books created big waves in research platforms in Tamil Nadu. His research on Literature, History and in Numismatics has been extensively used in all his books.

Links to other books available in our website Tamil desiyam are

Tamil books PDF,

Tamil novels free download,

Novels in Tamil,

about life quotes in Tamil.

 Back