16 Life Quotes in Tamil

Tamil Desiyam offers the Latest collection of Life Quotes in Tamil, that will help you to shape your thoughts and encourage you to become positive & successful in Life.

Quotes in Tamil

 

16 Life quotes in Tamil are as follows


1. எதிரி நம்மை விட பலம் குறைந்தவன் என்றால்; அவனை வீழ்த்த நினைப்பது கோழைத்தனம் - திருத்த நினைப்பது தான் வீரம்.


2. எந்த உறவுமே உங்களை ஏமாற்றியதில்லை எனில் - நீங்கள் இன்னும் யாரிடமும் உண்மையாக பழகவில்லை என்று அர்த்தம்.


3. நான் வெற்றி அடைவேன்; உடனடியாக இல்லாவிட்டாலும் - உறுதியாக.


4. உண்மையான அன்பை சுமக்கும் இதயம்; அடிக்கடி ஏமாற்றம் அடையலாம் - ஆனால் யாரையும் ஏமாற்றாது.


5. கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு - உனக்கு நீயே கொடுத்துக் கொள்ளும் தண்டனை.


6. தவறு செய்ய வாய்ப்பு கிடைத்தவன் கெட்டவன் - வாய்ப்பு கிடைக்காதவன் நல்லவன்.


7. இல்லாத போது தேடல் அதிகம் - இருக்கின்ற போது அலட்சியம் அதிகம்.


8. பக்குவம் அடைந்தவர்கள் - தன்னை காயப்படுத்தியவரை விட்டு மௌனமாக விலகிச் செல்வார்கள்.


9. அன்பு - யாராலும் திருட முடியாத நினைவுகளை கொடுக்கும்; அதேசமயம் யாராலும் குணப்படுத்த முடியாத வலியையும் விட்டுச்செல்லும்.


10. சிலரை பிடிக்காது என்றாலும் வெறுக்க முடியாது - சிலரை பிடிக்கும் என்றாலும் நெருங்கிட முடியாது.


11. வாழ்க்கையில் இனிமையாக வாழ ஒரே வழி - யாரின் மீதும் பற்று கொள்ளாமல் இருப்பது.


12. ஆயிரம் முறை சரியாக செய்திருந்தாலும் - ஒரு தவறை வைத்து எடை போடுவது மனிதனின் இயல்பு.


13. வாய்ப்புகளை உருவாக்க தெரியாதவர்களை விட - வாய்ப்புகளை பயன்படுத்தத் தெரியாதவர்கள் தான் அதிகம்.


14. ஒவ்வொரு துளி நீரையும் மதியுங்கள் - அது விண்ணில் இருந்து வந்தாலும்; கண்ணில் இருந்து வந்தாலும்.


15. வாழ்க்கை ஒரு கேள்வி - யாராலும் பதில் தர முடியாது; மரணம் ஒரு விடை - யாராலும் கேள்வி கேட்க முடியாது.


16. உங்க அப்பா செத்ததுக்கு அப்புறம் தெரியும் - பொறுப்புன்னா என்னன்னு; உங்க அம்மா செத்ததுக்கு அப்புறம் புரியும் - அன்புனா என்னன்னு.


 

Find more details about life quotes in Tamil and motivational quotes in Tamil on our website Tamil Desiyam.

Sharing is Caring :)

3 thoughts on “16 Life Quotes in Tamil”

Leave a Comment