No Image Available

Moolanool மூல நூல் மரபுக் கல்விக்கான பாட நூல்

 Author: ம.செந்தமிழன்  Category: Semmai Vanam  Publisher: செம்மை  Published: 2021  Country: India  Language: Tamil  Tags: Moolanoolமூலநூல் |
 Description:

Moolanool மூல நூல் மரபுக் கல்விக்கான பாட நூல்

ஆசான் ம. செந்தமிழன் அவர்கள் எழுதிய மூலநூல் எனும் நூலில் இருந்து….

கோழிகள் மேய்ந்து கொண்டுள்ளன. அவற்றை நன்றாக நோக்குங்கள். அவை மிகச் சிறிய புழுக்களையும் பூச்சிகளையும் தானியங்களையும் தேடித் தேடிக் கொத்துகின்றன. மனிதக் கண்களால் காண இயலாத பொருட்களையும் உயிரினங்களையும் கோழிகள் காண்கின்றன. கோழிகளுக்குத் தேவையானவை எவ்வளவு சிறியவையாக இருந்தாலும் அவற்றைக் காண்கின்றன. கோழிகளின் கண் எனும் புலனறிவு இதைச் செய்யத் துணை நிற்கிறது. இது அவற்றின் அறிவு அல்லது அறிதல்.
கோழிகள் மேயும் அதே நிலத்தில் மரத்துண்டுகள் கிடக்கின்றன. அம்மரத்துண்டுகளை. கோழிகள் பார்க்கின்றன. அவற்றில் தமக்கான இரை உள்ளதா என நோக்குகின்றன. ஒருவேளை, மரத்துண்டுகளின் உள்ளே கரையான்கள், எறும்புகள் போன்றவை இருந்தால் அவற்றைக் கொத்தித் தின்கின்றன. இல்லை என்றால், மரத்துண்டுகளை ஒதுக்கிவிட்டுச் செல்கின்றன. இதுதான் புரிதல். பக். 22

மனம் உணர்வின் வழிகாட்டி. மனம் ஒவ்வொரு மனிதரையும் உணர்வு நோக்கி இழுத்துச் செல்லும். உணர்வு, மாபெரும் ஆற்றல். அதன் ஈர்ப்பு விசையில் எந்த மனிதரும் உள்ளிழுக்கப்படுகிறார். மனத்தால் வாழும் போது மட்டுமே மனிதர்கள் இன்பம் அடைகின்றனர். தேவை, தேவையற்றவை என்ற பாகுபாடு மனிதர்களுக்கும் உண்டு. அது மிக முக்கியமான ஒழுங்கு. ஆனால், மனிதர்கள் இந்த நிலையோடு தம்மை நிறுத்திக் கொள்வதில்லை. அவர்களால், இங்கேயே நின்றுவிட முடியாது. ஏனெனில், உணர்வு பேரமைப்பும் பெரும் விசையும். அவர்களை ஒரு நிலையில் நிலைக்க அனுமதிக்காது. உணர்வு ஒவ்வொரு மனிதரையும் தன்னை நோக்கி ஈர்க்கிறது. பக். 31

இயல்புகளை வகுப்பதும் வழங்குவதும் பண்புதான்.
வேப்பங்காய் கசப்பாக இருப்பது, அதன் இயல்பு
இந்த இயல்பினை வேப்ப மரத்திற்கு வழங்குவது பண்பு. இயல்பும் பண்பும் வேறுவேறானவை. கள்ளியில் முள் இருப்பது அதன் பண்பு. அதே கள்ளிச் செடியை வீட்டில் வளர்த்து கூடுதலாகத் தண்ணீர் பாய்ச்சினால், கள்ளியின் முட்கள் குறைந்து போகும். முள் வளர்ப்பது கள்ளியின் இயல்பென்றாலும், சூழலில் மாற்றம் உருவாகும்போது இயல்பும் மாற்றமடையும். ஆனால், கள்ளிச் செடி என்றால் முள் இருந்தே தீரும், என்ற தனித்துவம் அதன் இயல்பல்ல, பண்பு. பக். 41

காற்றின் திறன் குறைதல் என்பது, காற்றின் வேகம் குறைவதல்ல. பொருளை ஆக்கும் தன்மையை காற்று இழத்தல் ஆகும். உயிரினங்களின் உடல்கள் வளர்வதும் வடிவமைக்கப்படுவதும் நீடிப்பதும் காற்றின் திறனால்தான். காற்றின் திறன் குறைகையில் எல்லா உயிரினங்களும் தம் வடிவத்தை இழக்கின்றன. அவ்வுடல்களின் நிலைத்தன்மை குலைகிறது. உடல் சிதைவடைகிறது. பக். 110

சிவம் உயிராகவே இருந்தால், பிறவிகள் இல்லை. சிவத்தைப் பண்புச் சாரமாக மாற்றும் சக்தியின் செயல்களே உயிரினங்களின் பெருக்கமும், நீக்கமும். உருக்கொடுப்பதாலும், வாழ்க்கை அமைத்துத் தருவதாலும் சக்தியை அன்னை என்கிறோம். உயிராக இருப்பதாலும், பண்புச் சாரமாக வழிநடத்துவதாலும், சிவத்தை அப்பன் என்கிறோம். சிவமும் சக்தியும் தனித்தனி அல்ல என்பதால், அம்மையப்பர் என்கிறோம். பக். 124

நூலை பெற : https://semmaivanam.org/product/moolanool/

Visit Tamil desiyam for more details about Tamil language, siddha medicine, Tamil books, civilization, culture, politics, people and History.

 Back